பாவ மன்னிப்பை ஏற்றல்
1. பாவ மன்னிப்பை ஏற்றல்
இராகம் : சுபபந்துவராளி
நடத் : அன்புடை இறைவா அடியவர் நாங்கள் உம்மிடம் பற்றாம்
உறுதி பூண்டோம்
சபை : உறுதி பூண்டோம்
நடத் : பாவம் மன்னித்தருளியெமது மனத்தில் சாந்தி மேவிடச் செய்யும்
சபை : மேவிடச் செய்யும்
நடத் : ஆண்டவர் கிறிஸ்து இயேசு வழியே வேண்டுகின்றோம்
சபை : வேண்டுகின்றோம்.
2. அருள்மறை வேண்டல்
இராகம் : நாட்டை இடையிசை: ப நி ச் நீ /பா ம க ம ப மா கா சா
தாளம் : சதுஸ்ரஆதி க ம ப மா கா சா/க ம பா பா
நடத் : திருமறை ஓதும் பெருநெறியாவும் எளியவர் காண அருள்வோரே
சபை : திறமுடை ஞானம் வளநிறைவோடு உளமதில் நாளும் தருவோரே
நடத் : இருள் மறைந்தோட ஒளி மிகுந்தோங்க அடியவர் வாழ விழைவோரே
சபை : அருள்மறை கூறும் உரையதன் மூலம் அணைந்தெமை ஏந்தவரவேணும்.
Comments
Post a Comment