Posts

Showing posts from April, 2022

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

  மங்கலப்பாடல்   பல்லவி   சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் ; ஆதி   திரி யேசு நாதனுக்கு சுபமங்களம்   அனுபல்லவி   பாரேறு நீதனுக்கு , பரம பொற்பாதனுக்கு   நேரேறு போதனுக்கு , நித்திய சங்கீதனுக்கு சரணங்கள் 1. ஆதி சரு வேசனுக்கு , ஈசனுக்கு மங்களம்     அகிலப் பிர காசனுக்கு , நேசனுக்கு மங்களம்     நீதி பரன் பாலனுக்கு , நித்திய குணாலனுக்கு ,     ஓதும் அனுகூலனுக்கு , உயர் மனுவேலனுக்கு -                          சீர்   2. மானாபி மானனுக்கு , வானனுக்கு மங்களம்     வளர் கலைக் கியானனுக்கு , ஞானனுக்கு மங்களம்   கானான் நல் தேயனுக்குக் கன்னிமாரிசேயனுக்கு   கோனார் சகாயனுக்குக் கூறு பெத்தலேயனுக்கு -                    ...

ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் - அருளும்

  இறைவாழ்த்து நடத் : ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் - அருளும் அனைவரின் தாய்தந்தையாம் இறைவரின் - அன்பும் தூய ஆவியார் திருவுறவதுவும் தொடர்ந்து நமக்குத் துணை அருள்வதாக எல்லோரும் : ஆமென்

ஒளியென உலகில் உதித்தவர் இயேசு

  ஒளியேற்றல் 1. ஒளியென உலகில் உதித்தவர் இயேசு   ஒளியென விளங்க அழைக்கிறார் நம்மை   ஓடியே வருவோம் ஒருமித்தே உழைப்போம்   ஓரிறை அவரை உண்மையாய்த் தொடர்வோம்     2. இருளதின் பிடியில் இருக்கின்ற உலகை     அருளவர் துணையால் விடுவித்துக் காப்போம்     மருளதை நீக்கும் மன்னவர் அவரின்     கருணையின் நிழலில் கடமைகள் புரிவோம்   3. வறுமையாம் இருளில் வாழ்ந்திடும் மாந்தர்      சிறுமைகள் நீங்கி சீர்ப்பட உழைப்போம்      தனிமையைத் துரத்தி நட்பினை அளிப்போம்    கனிவுடன் பிறர்க்குக் கடன்பணி புரிவோம்   4. நாட்டினில் நடப்புகள் இருளடைந்திருக்க      போட்டிகள் மிகுந்து பிரிவினை மிஞ்சிட      நாட்டமுடன் நாம் நாயகர் இயேசு      காட்டிடும் பாதையில் களிப்புடன் செல்வோம் .

நேயநல் வானகத் தெங்கள் தந்தாய்

  ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல் ( பாடல் வழி ஆக )   1. நேயநல் வானகத் தெங்கள் தந்தாய்   தூயதாய் நின்பேர் தொழப்படுக   வருக நின் அரசே திருச் சித்தமே   பெருக விண்ணதில் போல் மண்ணுலகில்   2. அன்றன்று வேண்டிய எம் உணவை   இன்றெமக் கீந்தருள் பொழிந்தருள்வாய்   பிறர்பிழை நாங்கள் பொறுப்பதுபோல்   எம் பிழையும் பொருத்தருள் புரிவீர்   3. சோதனை நேர்கையில் எமை விலக்கி   தீதினை நீக்கியே மீட்டருள்வாய்   ஆட்சியும் ஆற்றலும் சீர்த்திமிகு   மாட்சியும் யாண்டுமே உமக்குரிய

ஆண்டவா, உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்

  திருப்பணிக்கொடைப் பாடல் பல்லவி ஆண்டவா , உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத் தூண்டும் உன் ஆவி அருள்வாய் அனுபல்லவி என்னைத் தியாகிக்க ஏவும் உன் அனல் மூட்டிடுவாய் இந்நிலம் தன்னில் மாளும் மனுமக்கள் மீட்பிற்காக -                                                                                ஆண்டவா சரணங்கள் 1. புசிக்கப் பண்டமில்லாமல்     பூவில் இல்லமுமே அன்றி     நசிந்து நலிந்து நாட்டில்     கசிந்து கண்ணீர் சொரிந்து     தேச மெல்லாம் தியங்கும்     நேசமக்கள் சேவைக்கே     நிம...