ஒளியென உலகில் உதித்தவர் இயேசு


 ஒளியேற்றல்


1.ஒளியென உலகில் உதித்தவர் இயேசு

  ஒளியென விளங்க அழைக்கிறார் நம்மை

  ஓடியே வருவோம் ஒருமித்தே உழைப்போம்

  ஓரிறை அவரை உண்மையாய்த் தொடர்வோம்

 

 

2. இருளதின் பிடியில் இருக்கின்ற உலகை

    அருளவர் துணையால் விடுவித்துக் காப்போம்

    மருளதை நீக்கும் மன்னவர் அவரின்

    கருணையின் நிழலில் கடமைகள் புரிவோம்

 

3. வறுமையாம் இருளில் வாழ்ந்திடும் மாந்தர்

    சிறுமைகள் நீங்கி சீர்ப்பட உழைப்போம்

    தனிமையைத் துரத்தி நட்பினை அளிப்போம்

   கனிவுடன் பிறர்க்குக் கடன்பணி புரிவோம்

 

4. நாட்டினில் நடப்புகள் இருளடைந்திருக்க

    போட்டிகள் மிகுந்து பிரிவினை மிஞ்சிட

    நாட்டமுடன் நாம் நாயகர் இயேசு

    காட்டிடும் பாதையில் களிப்புடன் செல்வோம்.

Comments

Popular posts from this blog

நேயநல் வானகத் தெங்கள் தந்தாய்

ஒரு நாள் வருவார் மனுவின் மகனாய்