சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்


 மங்கலப்பாடல்

 

பல்லவி

 சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி

 திரி யேசு நாதனுக்கு சுபமங்களம்

 

அனுபல்லவி

 பாரேறு நீதனுக்கு, பரம பொற்பாதனுக்கு

 நேரேறு போதனுக்கு, நித்திய சங்கீதனுக்கு

சரணங்கள்

1. ஆதி சரு வேசனுக்கு, ஈசனுக்கு மங்களம்

   அகிலப் பிர காசனுக்கு, நேசனுக்கு மங்களம்

   நீதி பரன் பாலனுக்கு, நித்திய குணாலனுக்கு,

   ஓதும் அனுகூலனுக்கு, உயர் மனுவேலனுக்கு-                          சீர்

 

2. மானாபி மானனுக்கு, வானனுக்கு மங்களம்

   வளர் கலைக் கியானனுக்கு, ஞானனுக்கு மங்களம்

  கானான் நல் தேயனுக்குக் கன்னிமாரிசேயனுக்கு

  கோனார் சகாயனுக்குக் கூறு பெத்தலேயனுக்கு-                         சீர்

 

3. பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்

   பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்

   சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு,

   பத்தர் உப காரனுக்குப் பரம குமாரனுக்கு -                                 சீர்

Comments

Popular posts from this blog

ஒளியென உலகில் உதித்தவர் இயேசு

நேயநல் வானகத் தெங்கள் தந்தாய்

ஒரு நாள் வருவார் மனுவின் மகனாய்