ஆண்டவா, உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்
திருப்பணிக்கொடைப் பாடல்
பல்லவி
ஆண்டவா, உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்
தூண்டும் உன் ஆவி அருள்வாய்
அனுபல்லவி
என்னைத் தியாகிக்க ஏவும்
உன் அனல் மூட்டிடுவாய்
இந்நிலம் தன்னில் மாளும்
மனுமக்கள் மீட்பிற்காக - ஆண்டவா
சரணங்கள்
1.புசிக்கப் பண்டமில்லாமல்
பூவில் இல்லமுமே அன்றி
நசிந்து நலிந்து நாட்டில்
கசிந்து கண்ணீர் சொரிந்து
தேச மெல்லாம் தியங்கும்
நேசமக்கள் சேவைக்கே
நிமலா, எனை ஏற்றுக்கொள் -
ஆண்டவா
2.வறுமை வன் கடன் வியாதி
குருட்டாட்டம் கட்சி கடும்
அறிவீனம் அந்தகாரம்
மருள் மூடி மக்கள் வாடும்
தருணம் இக்காலமதால்
குருநாதா, உனதன்பை
அருள்வாய், அடியேனுக்கே - ஆண்டவா
3.அருமை ரட்சகா, உன்றன்
அரும்பாடு கண்ணீர் தியாகம்
பேரன்பு பாரச் சிலுவை
சருவமும் கண்ட என்றன்
இருதயம் தைந்துருவி
வெறும் பேச்சாய் நின்றிடாமல்
தருணம் எனையே தந்தேன் - ஆண்டவா
4.உலகே உன தாயினும்
தலை சாய்க்கத் தாவில்லாமல்
நலமே புரிந்து திரிந்தாய்
எல்லாம் துறந்து யான் உன்
நல்லாவி கொண்டுழைக்க
வல்லவா, உனின் சிலுவை
Comments
Post a Comment