நேயநல் வானகத் தெங்கள் தந்தாய்
ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல் (பாடல் வழி ஆக )
1.நேயநல் வானகத் தெங்கள் தந்தாய்
தூயதாய் நின்பேர் தொழப்படுக
வருக நின் அரசே திருச் சித்தமே
பெருக விண்ணதில் போல் மண்ணுலகில்
2.அன்றன்று வேண்டிய எம் உணவை
இன்றெமக் கீந்தருள் பொழிந்தருள்வாய்
பிறர்பிழை நாங்கள் பொறுப்பதுபோல்
எம் பிழையும் பொருத்தருள் புரிவீர்
3.சோதனை நேர்கையில் எமை விலக்கி
தீதினை நீக்கியே மீட்டருள்வாய்
ஆட்சியும் ஆற்றலும் சீர்த்திமிகு
மாட்சியும் யாண்டுமே உமக்குரிய
Nice lyric. number to word converter
ReplyDelete