ஒரு நாள் வருவார் மனுவின் மகனாய்
பல்லவி
ஒரு
நாள் வருவார் மனுவின் மகனாய்
அருகில்
இருந்திடுவார் என
இறைவாக்காளர்
உரைத்தது போல
இறை
மகன் இயேசு வந்தார் - இன்று
மனு
மகன் இயேசு வந்தார் - ஒரு நாள்
சரணம்
1.
அடிமையின்
வாழ்வை ஆண்டவர் வெறுத்தார்
ஆள்களை அனுப்பித் தந்தார் - இன்று
விடியா வாழ்வில் விடுதலை அளிக்க
விடிவெள்ளி இயேசு வந்தார் - இன்று
அடியரை அணைக்க வந்தார் - ஒரு நாள்
2.
இறைவர்
நம்மோடிருந்திட வந்தார்
குறைவில் நிறைவு தந்தார் - இன்று
கூக்குரல் எழுப்பும் மாந்தர் தம் வாழ்வில்
ஏக்கம் தீர்க்க வந்தார் - நல்ல
ஆக்கம் அளிக்க வந்தார் - ஒரு நாள்
Comments
Post a Comment