புதிய புதிய தலைமுறைக்குப் புதிய புதிய சிலுவ
புதிய
புதிய தலைமுறைக்குப் புதிய புதிய சிலுவ
பல்லவி
புதிய
புதிய தலைமுறைக்குப் புதிய புதிய சிலுவ அந்தப்
புதிய
சிலுவ காட்டணும் அன்புள்ள இறைவன் இதய பளுவ
1.கொத்துக் கொத்தாக்
காச்சிருக்குக்
கொடிமுந்திரி திராட்ச - சப
உத்தமிக்குத் தன் மணவாளனை
அங்கே சந்திக்க - ஆச
தோட்டத்தில சந்திக்க வந்தா
தொங்குதையா சிலுவ - அது
கிராமத்துக்குப் போகத்
தூண்டுதுங்க
கேட்கிறதாம் அங்கே அழுக - புதிய
2.அந்த அந்த இடத்திற்கேற்ப
இருக்குதுங்க சிலுவ - அது
அழகு பார்க்கும் பொருளில்லிங்க
அற்புத செயலுதாங்க
சிந்தையில அன்பைக் காட்டி
செயலையுமே கூட்டி
மந்தை ஒண்ணா போகணுமையா
மன்னவன் சிலுவ தூக்கி - புதிய
Comments
Post a Comment