நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே


நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே 


  நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே

  நன்மைகள் நாளும் நினைந்திடுதே

  என்னருள் நாதர் அருட்கொடைகள்

  எத்தனை ஆயிரம் என்றிடுதே... ! !


  ஆழ்கடல் ஆகாயம் விண்சுடர்கள்

  ஆறுகள் காடுகள் நீர்நிலைகள்

  சூழ்ந்திடும் தென்றல் நீள்மரங்கள்

  தூயநல் தேன்மலர் தீங்கனிகள்

 

 

   இன்பமாய் வாழ்ந்திட இல்லங்கள்

   எழிலுடன் குழந்தைச் செல்வங்கள்

   துன்புறும் வேளையில் துணைக்கரங்கள்

   துதித்திட சொல்லுடன் ராகங்கள்

 

   உறவினில் மகிழ்ந்திட நண்பர்கள்

   உதவிகள் செய்திட் பல்பணியர்

  அறவழி காட்டிட அருள் பணியர்

  அன்புடன் ஏற்றிட ஆண்டவர்

 

   உருவுடன் விளங்கிட ஓருடலம்

  உடலதில் இறைவனுக்கோர் இதயம்

  பெருமைகள் கொடுமைகள் அழிந்தொழிய

  திருமறை பேசிடும் வானுலகம்.


Comments

Popular posts from this blog

ஒளியென உலகில் உதித்தவர் இயேசு

நேயநல் வானகத் தெங்கள் தந்தாய்

ஒரு நாள் வருவார் மனுவின் மகனாய்