வழிபடுவோம் வாரீர்

 

வழிபடுவோம் வாரீர்


வழிபடுவோம் வாரீர்- இறைப்பதம்

தொழுதிடுவோம் வாரீர்

 

துங்கவர் இயேசுவின் திருப்பெயரை

தூதர்களின் பரிவாரத்துடன்

தூயா தூயா தூயாவென

துத்தியம் செய்து போற்றிடுவோம்

துங்கவர் இயேசு நல்லவரே

துதிகளுக்கென்றும் பாத்திரரே -                                    வழிபடுவோம்

 

பாவியின் நேசர் பாதமதில்

பாவங்களை மிகு வணக்கத்துடன்

பணிவாய் அவரிடம் அறிக்கை செய்து

பரமரின் ஆசி பெற்றிடுவோம்

பாவத்தில் கோபம் வைத்திருப்பார்

பாவி மேல் கோபம் வையாரே -                                வழிபடுவோம்

 

கேட்டிடுவோம் நல் திருவசனம்

நாட்டமுடன் நாம் நலம் பெறவே

அகத்தின் இருளினைப் போக்கிடுமே

இகத்திலவர் வழி காட்டிடுமே

தாமே வார்த்தையாய் நின்றவரே

தாரணி மீட்டிட வந்தவரே-                                            வழிபடுவோம்

Comments

Popular posts from this blog

ஒளியென உலகில் உதித்தவர் இயேசு

நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்