தொழுகைக்கு அழைப்பு

 

1. தொழுகைக்கு அழைப்பு


இராகம் : சரசாங்கி                          முன்னிசை  : ரி ந ச்

                                                ச் நி ரி ச      

 

நடத் : இறைவரொளியாம் இலையே அவர் பால்

           இருளேதும் இல்லையறி

           எல்லார்க்கும் பெரியோர் இறைவர் ஒருவரே,

           இறையே

           ஒப்பேதும் இல்லார் இயேசு கிறிஸ்து

           இறைவரின் திருமைந்தர்

 

 

2. போற்றுதல்

இராகம்:சிந்துபைரவி       இடையிசை:  நி ரி ச் நி   

தாளம் : சதுஸ்ரஆதி                                நி /பா 


நடத்  : அருவாய் எங்கும் இருப்பாய் போற்றி

            பெருமை யாவும் படைத்தாய் போற்றி 

சபை : அருவாய் எங்கும் இருப்பாய் போற்றி

             பெருமை யாவும் படைத்தாய் போற்றி

நடத்  : உலகம் யாவும் வனைந்தாய் போற்றி

             நலன்கள் எங்கும் நிறைப்பாய் போற்றி

சபை : உலகம் யாவும் வனைந்தாய் போற்றி

             நலன்கள் எங்கும் நிறைப்பாய் போற்றி

 

 

இராகம் : ஆரபி                              இடையிசை : ச் ரி ச்

தாளம் : சதுஸ்ரஆதி                            ரி ரீ பா

 

நடத்:   திருவாக் கென்னும் திருவே  போற்றி

             பெருவாக் கருளும் பெரியோய் போற்றி

சபை:  திருவாக் கென்னும் திருவே போற்றி

             பெருவாக் கருளும் பெரியோய் போற்றி

நடத்:   மனித உருவில் வந்தாய் போற்றி

             புனித அன்பைப் பொழிந்தாய் போற்றி

சபை:  மனித உருவில் வந்தாய் போற்றி

             புனித அன்பைப் பொழிந்தாய் போற்றி

 

இராகம் : காபி                         இடையிசை : நி ரி நி     

தாளம் : சதுஸ்ரஆதி                                      கா ரி ரி

 

நடத் :  தூய ஆவியாராம்  துணையே போற்றி

            மாயம் தொலைக்கும் மேலோய் போற்றி

சபை : தூய ஆவியாராம் துணையே போற்றி

             மாயம் தொலைக்கும் மேலோய் போற்றி

நடத் :   உனக்குள் அடியரை வைத்தாய் போற்றி

             மணத்துள் எல்லாம் மலர்வாய் போற்றி

சபை : உனக்குள் அடியரை வைத்தாய் போற்றி

             மனத்துள் எல்லாம் மலர்வாய் போற்றி

 

 

3. இறை அருள் வேண்டல்

   இராகம் : ஆனந்த பைரவி   இடையிசை :  ச்  ச் / ச் நி பா

   தாளம் : திஸ்ர ரூபகம்                  கா பா மா கா ரி / ரி ரீ கா சா

நடத் :  எத்திசை யாளரும் தொழு பவரே

             இத்திசை ஆரருள்  தருவீரே

சபை : பக்தரைத் தாங்கிடும் பெரியவரே

             சித்தமே பூண்டெழுந் தருள்வீரே

நடத் :   எத்தகை யோரையு மணைவோரே

             இத்தலத் தோரையு மணைவீரே

சபை:   சுத்தரே இயேசென்னும் பெயராளரே

             மெத்தவே ஆவியை அருள்வீரே 

Comments

Popular posts from this blog

ஒளியென உலகில் உதித்தவர் இயேசு

நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்