பிழை அறிக்கைக்கு அழைப்பு
பிழை அறிக்கைக்கு அழைப்பு
நடத் : படைத்திரளின் ஆண்டவர் அதிதூயர், அதிதூயர், அதிதூயர்
பூமியனைத்தும் அவரது மாட்சியால் நிறைந்திருக்கின்றது
"எங்கே இருவரோ, மூவரோ என் பெயரில் கூடியுள்ளனரோ
அங்கே அவரிடையே நான் இருக்கிறேன்" என்கிறார்
இயேசுபிரான். அவர் திருமுன்னர் அமைதியாய் இருந்து
அவர் உணர்த்தும் பிழைகளை அறிக்கையிடுவோம்.
பிழை அறிக்கைப் பாடல்:
நிமலனே நிமிர்ந்து பார்க்க துணிவில்லை
இறையே குறுகி யாம் குனிந்தோம்
இறையே குறுகி யாம் குனிந்தோம்
செய்யாத பிழைகளேது
எந்தன் வாழ்வினிலே - 2
நெறி தவறி உம் சாயல் இழந்தோம் கூனி குறுகி நின்றோம் - கூனி குறுகி நின்றோம்
செய்த தவறுகள் மனதை அழுத்திட - நிமலனே
மனதின் விருப்பங்களால்
துணிந்து யாம் பவ வினைகள் புரிந்தோம்
மனதின் விருப்பங்களால்
தினம் தினம் உந்தன் முகத்தில் உமிழ்ந்தோம்
நாளும் யாம் வீணனே
எம்மில் மனமிறங்கும் -2
செயல்களால் உம்மை சிலுவை ஏற்றி சிரித்து மகிழ்ந்திருந்தோம்
பிழைகள் உணருகிறோம்
செய்த தவறுகள் மனதை அழுத்திட - நிமலனே
Comments
Post a Comment