வானும் புவியும் வையகமும்

 

பற்றுறுதி அறிக்கை


     வானும் புவியும் வையகமும்

     வனைந்த வல்லபரனான

     வானகத் தந்தையை நம்புகிறேன்

 

     அவரொரே திருமகன் கன்னியிடம்

    அனைவரின் நாதர் கிறிஸ்துவாய்

    அவதரித்ததையும் நம்புகிறேன்

 

    பிலாத்துவின் கீழவர் சிலுவையதில்

    பெரும்பாடுகளுடன் இறந்தடங்கி

    பெருங்குழி புகுந்ததை நம்புகிறேன்

 

    உயிரோடெழுந்தார் மூன்றாம் நாள்

    உயரே எழுந்து பரன் வலமே

    உடனிருந்ததையும் நம்புகிறேன்

 

 

   உயிருள்ளோரும் இறந்தோரும்

   உண்மையாம் தீர்ப்பை அடைந்திடவே

   உறுதியாய் வருவார் நம்புகிறேன்

 

   தூயாவி தூயோர் சபை உறவு

   பாவ மன்னிப்பு உடல் உயிர்ப்பு

   மெய் நிலைவாழ்வையும் நம்புகிறேன்  

Comments

Popular posts from this blog

ஒளியென உலகில் உதித்தவர் இயேசு

நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்